தண்ணி அடித்தால் கிட்னிக்கு நல்லது!
நியூயார்க்:மது அருந்துவதால் சிறுநீரக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாம்.
சுவீடனின் ஸ்டோக்ஹோம் நகரில் உள்ள கரோலின்ஸ்கா கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அலிக்ஜா உல்க் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் ஒரு இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அலிக்ஜா குழுவினர், பல்வேறு வகையான மது பானங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது மது அருந்துபவர்களிடையே சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவது குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.
சிறுநீரக புற்றுநோயுடன் இருக்கும் 855 பேரிடமும், புற்றுநோய் இல்லாத 1204 பேரிடமும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் நிலையான அளவுக்கு மது அருந்துவோருக்கு சிறுநீரக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் மிக மிக குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது.
அதாவது 200 மில்லி லிட்டர் கொண்ட ஒரு கோப்பை பீர், 100 மில்லி ஒயின், 40 மில்லி மது ஆகியவற்றை அருந்துபவர்கள் இவர்கள்.
100 கிராம் பீரில் 2.8 கிராம் அளவுக்கு ஆல்கஹால் உள்ளது. 100 கிராம் சிவப்பு ஒயினில், 9.9 கிராம் ஆல்கஹால் உள்ளது. பிற மது வகைகளில் 100 கிராம் மதுவுக்கு 32 கிராம் ஆல்கஹால் கலந்திருக்கிறது.
மது அருந்தாதவர்களை விட, ஒரு மாதத்திற்கு சராசரியாக 620 கிராம் எத்தனால் அருந்துவோரிடையே சிறுநீரக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் குறைவாக உள்ளதாம்.
வாரத்திற்கு 2 கிளாஸ் சிவப்பு ஒயின் அருந்துவோருக்கு சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் குறைவாக உள்ளதாம்.
அதேபோல, சிறுநீரக செல் புற்றுநோய்க்கும், சாதாரண வகை பீர், நடுத்தர வகை பீர், ஸ்டிராங் ஒயின் மற்றும் பிற ஆல்கஹால் அதிகம் உள்ள மது வகைகளை அருந்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
பீர் மற்றும் ஒயினில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி மியுடோஜெனிக் குணம் இருப்பதால்தான் இவற்றை அருந்துவோருக்கு சிறுநீரக புற்றுநோய் வருவது குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வேறு என்னென்னவோ வரலாம். அதனால குடிக்காதீங்க..












Click it and Unblock the Notifications