சிறுவன் செய்த சிசேரியன்: டாக்டரின் குரல்ஒப்பீடு சிடியை சோதிக்க ஆய்வு கூடம் மறுப்பு
மணப்பாறை:மணப்பாறையில் சிறுவன் சிசேரியன் ஆபரேசன் செய்த வழக்கில் டாக்டர் முருகேசனின் குரலை ஒப்பீடு செய்வதற்காக தமிழக போலீசார் அனுப்பிய சிடியை பரிசோதனை செய்ய சண்டீகரைச் சேர்ந்த ஆய்வுக்கூடம் மறுத்து விட்டது.
![]() |
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகள் முருகேசன்-காந்திமதி. இவர்களின் மகன் திலீபன்ராஜ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். திலீபன்ராஜை வைத்து தங்கள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்ததற்காக போலீசார் டாக்டர் தம்பதிகளை கைது செய்தனர். இவர்கள் தற்போது ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
தனது மகன் செய்த சிசேரியன் குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், நான் அப்படி பேட்டியே தரவில்லை என பல்டி அடித்துவிட்டார் டாக்டர்.
![]() |
ஆனால், அவர் கொடுத்த பேட்டியை ஒரு பத்திரிக்கை நிருபர் செல்போனில் பதிவு செய்திருந்தார்.
ஏற்கனவே டாக்டரை விசாரணை நடத்திய போலீசார், முருகேசன் குரலை சிடியில் பதிவு செய்தனர். பத்திரிக்கை நிருபர் பதிவு செய்த செல்போனில் இருந்த டாக்டரின் குரலையும் சிடிக்கு மாற்றினர்.
![]() |
இந்த இரு சிடிக்களையும் குரல் ஒப்பீடு சோதனை செய்ய கடந்த 20ம் தேதி புத்தாநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் ஜாபர் ஹூசேன் பஞ்சாப் தலைநகர் சண்டீகரில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு சென்றார்.
ஆனால் சிடிக்களின் மீது உள்ள நீதிமன்ற முத்திரைகள் சரியாக வைக்கப்படவில்லை என்றும், குரலை பதிவு செய்த செல்போனையும் எடுத்து வரவேண்டும் என்று கூறி சண்டீகர் பரிசோதனைக்கூடம் சிடியை சோதனை செய்ய மறுத்து சப்-இன்ஸ்பெக்டரை திருப்பி அனுப்பி விட்டதாம்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. டாக்டரின் குரல் ஒப்பீடு சோதனை குறித்த முடிவு வந்ததும் இந்த வழக்கின் குற்றப் பத்திக்கையை போலீசார் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆனால்,சண்டீகர் ஆய்வுக் கூடத்தினால் இந்த வழக்கு மேலும் தாமதமாகும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக















Click it and Unblock the Notifications