அதிபர் பதவி- பெனாசிருடன் முஷாரப் பேரம்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபராக தன்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகுவதாக பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பேரம் பேசி வருகிறார்.
![]() |
பாகிஸ்தான் அதிபர், ராணுவ தளபதி என இரண்டு பதவிகளையும் வகித்து கொண்டு நாட்டில் சர்வாதிகார அரசு நடத்திக் கொண்டுள்ளார் முஷாரப். அவருக்கு இப்போது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலை வீசுகிறது.
இஸ்லாமாபாத் வப்பு மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானில் வன்முறைகள் அதிகரித்து விட்டன. இந்த தாக்குதலை கண்டித்தும், அதிபர் முஷாரப்பை எதிர்த்தும், அந்நாட்டில் உள்ள முஸ்லீம் மதகுருமார்கள் மற்றும் முஷாரப்புக்கு எதிரானவர்கள் பல்வேறு வழிகளில் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
![]() |
மேலும் அல் கொய்தா அமைப்பும் முஷாரப் ரத்தத்திற்காக துடித்துக் கொண்டிருக்கிறது. முஷாரப்பின் ரத்தத்தை வைத்து சிவப்பு மசூதியில் கொல்லப்பட்டவர்களின் சோகம் துடைக்கப்படும் என்று அல் கொய்தா எச்சரித்துள்ளது.
இது போதாதென்று, முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி மீண்டும் பதவியில் அமர்ந்துள்ளார். அவர் பதவிக்கு வந்த பின்னர் முக்கியத் தீர்ப்பாக, முன்னாள் பிரதமரும், முஷாரப்பால் நாட்டை விட்டு விரட்டப்பட்டவருமான நவாஸ் ஷெரீப் நாடு திரும்பலாம் என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
![]() |
இப்படி அடுத்தடுத்து முஷாரப்புக்கு எதிரான போக்கு பாகிஸ்தானில் வலுத்து வரும் நிலையில் நாடாளுமன்றத்திற்கும் அதிபர் பதவிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபராக தானே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என முடிவு செய்துள்ளார் முஷாரப்.
அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் முஷாரப், தன் நாட்டு மக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும், அரசியல்வாதிகளின் விமர்சனைத்தை அடக்கவும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக கடந்த மாதம் அபுதாபியில் முஷாரப்பும், பெனாசிர் பூட்டோவும் ரகசியமாக சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து முஷாரப்புடன் கூட்டணி சேர தீர்மானித்தார் பெனாசிர். இருப்பினும் ராணுவத் தளபதி பதவியில் முஷாரப் நீடிக்கக் கூடாது என்று கோரி வருகிறார் பெனாசிர்.
பாக். அமைச்சர் ராஜினாமா!
இதற்கிடையே முஷாரபுக்கு இன்னொரு தலைவலியாக அவரை எதிர்த்து அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகாமல் மீண்டும் அதிபராக முஷாரப் முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் இஷாக் கக்வானி ராஜினாமா செய்துள்ளார்.
இந் நிலையில் மீண்டும் அதிபராக பல சூட்சும வழிகளை கையாண்டு வருகிறார் முஷாரப். பெனாசீருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தனது பிரதிநிதிகளை லண்டனுக்கு அனுப்பியுள்ளார்.
முஷாரபை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்தால் ராணுவ தளபதி பதவியிலிருந்து அவர் விலகுவார் என பெனாசிரிடம் இந்தத் தூதர்கள் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு















Click it and Unblock the Notifications