நகராட்சி ஆணையர் அறைக்குபூட்டு போட்ட மக்கள் போராட்டம்
கடையநல்லூர்:குடிநீர்ப் பிரச்சினை, தெரு விளக்கு பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாத நகராட்சியைக் கண்டித்து ஆணையரின் அறைக்குப் பூட்டுப் போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி 31வது வார்டு பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சனை நிலவி வருவதாகவும், அதை விரைந்து சீர் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது. பொது மக்கள் பலமுறை நகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க வந்த போதிலும் அவர் அலுவலகத்தில் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கனக்கானோர் தங்கள் வார்டு பிரச்சனையை கூற நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
அப்போது அலுவலகத்தில் ஆணையாளர் இல்லாததாலும், அவருடைய அறை பூட்டி இருந்ததாலும் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் அறைக்கு இன்னொரு பூட்டைப் போட்டுப் பூட்டி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications