எதையும் விடமாட்டேன்: அந்தர் பல்டி முஷாரப்!
இஸ்லாமாபாத்:ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், அது தொடர்பாக நான் யாருக்கும் உறுதிமொழி அளிக்கவில்லை என்று முஷாரப் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மறுத்துள்ளார்.
பாகிஸ்தானில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தன் மீது நாட்டு மக்களின் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசிருடன் உடன்பாடு செய்துள்ளார்.
அந்த உடன்பாட்டின்படி பெனாசிருக்கு எதிரான ஊழல் புகார்களையும், அவரது கணவர் மீதான ஊழல் வழக்குகளையும் கைவிட முஷாரப் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதனால் அபுதாபியில் தங்கியிருக்கும் பெனாசிர் விரைவில் பாகிஸ்தான் திரும்ப இருக்கிறார்.
அதிபர் பதவியோடு ராணுவ தளபதியாகவும் இருந்து வரும் முஷாரப் தளபதியில் நீடிக்க கூடாது என்று பெனாசிர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் வற்புறுத்தி வந்தன.
எனவே பெனாசிருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக முஷாரப் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்ய முடியாது. இது தொடர்பாக நான் எவருக்கும் உறுதி மொழி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால் முஷாரப்-பெனாசிர் சமரச முயற்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே முஷாரப்பின் கடும் எதிர்ப்பாளரான முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வரும் செப்டம்பர் 10ம் தேதி பாகிஸ்தான் திரும்பவுள்ளார்.
வந்தால் கைது என்ற முஷாரப்பின் எச்சரிக்கையையும் மீறி உச்ச நீதிமன்றத்தின் ஆதரவோடு திரும்பி வரும் ஷெரீப், முஷாரப்புக்கு பெரும் குடைச்சல் தரவுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications