எந்த பகுதியிலிருந்தும் மின் கட்டணம் செலுத்தும் வசதி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:தமிழகத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மின் கட்டணத்தை செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஆண்டார்குளத்தில் நடைபெற்ற இலவச கலர் டிவி வழங்கும் விழாவில் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசுகையில்,

இலவச கலர் டிவி திட்டத்திற்கு ரூ. 780 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஒரளவுக்கு மேல் உற்பத்தி செய்ய முடியாததால் படிப்படியாக டிவிக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திமுக ஆட்சியில் குமரி மாவட்டத்தில் மட்டும் 2,000 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா, நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா, சாத்தான்குளம் பகுதியில் டாடா சார்பில் டைட்டானியம் தொழிற்சாலை ஆகியவை அமைய முதல்வர் முயற்சிகள் எடுத்து வருகிறார்.

மேலும் தமிழகம் முழுவதும் விரைவில் எந்த பகுதியிலும் இருந்தும் தங்களது மின் கட்டணத்தை செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக கம்யூட்டர்கள் மூலம் மின்வாரிய அலுவலகங்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+