கேரளாவில் புது ரயில்வே மண்டலம்<br>அமைக்க சாத்தியம் இல்லை - வேலு

Subscribe to Oneindia Tamil


டெல்லி: கேரளாவில் புதிய மண்டல ரயில்வே அலுவலகத்தை அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை என்று ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.Velu

சேலம் ரயில் கோட்டத்தை அமைப்பதில் ரயில்வே உறுதியாக இருந்தால், கேரளாவுக்கென தனி மண்டல அலுவலகத்தை அமைக்க வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்துப் பரிசீலிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஆர்.வேலு கூறுகையில், புதிதாக ஒரு ரயில்வே மண்டலம் அமைக்க வேண்டுமென்றால், பரப்பளவு, வேலைப்பளு, போக்குவரத்து முறை, இயக்கம், நிர்வாக தேவைகள், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆராய்ந்த பின்னர் தான் அமைக்கப்படும்.

ஆனால் இத்தகைய சாத்திய கூறுகள் குறித்து கேரள அரசின் கோரிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் அங்கு தனியாக ஒரு ரயில்வே மண்டலத்தை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்றார் வேலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+