மலேசியா: அழுக்குச் சட்டையுடன் டாக்சி ஓட்டினால்br/அபராதம்!
கோலாலம்பூர்: கசங்கிய சட்டை, அழுக்குச் சட்டையுடன் டாக்சி ஓட்டும் டிரைவர்களுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது. தூய்மையான உடையில்தான் டாக்சி டிரைவர்கள் செயல்பட வேண்டும் என்றும் அது கண்டிப்புடன் கூறியுள்ளது.
மலேசிய டாக்சி டிரைவர்களுக்கு அந்நாட்டு வணிக வாகன உரிமம் வழங்கும் வாரியம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதந்படி வெள்ளைச் சட்டை, கருப்பு பேன்ட் மற்றும் கருப்பு ஷூக்களை டாக்சி டிரைவர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும். மேலும் சட்டையை டக் இன் செய்திருக்க வேண்டும்.
இதில் ஏதாவது மாற்றம் இருந்தாலோ அல்லது டக் இன் பண்ணாமலோ அல்லது ஷூ ஒரு நிறமும், பேன்ட் ஒரு நிறமுமாகவோ இருந்தாலோ அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் நீட்டாக இருக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
இதுதவிர தூய வெள்ளை சட்டையில் வராதவர்களுக்கும், சாக்ஸ் இல்லாமல் ஷூ போடுபவர்களுக்கும் 29 டாலர் முதல் 86 டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது மூன்று நாள் சம்பளத்தின் சராசரித் தொகையை அபராதமாக கட்ட வேண்டுமாம்.
மலேசிய அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் அந்நாட்டு டாக்சி டிரைவர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியெல்லாம் செய்ய வேண்டுமானால் நிறைய செலவு செய்ய வேண்டும். பிறகு குடும்பத்தை எப்படிக் கவனிப்பது என்று அவர்கள் புலம்புகின்றனர்.
ஆனால் பொதுமக்கள் வேறு மாதிரியாக புலம்புகிறார்களாம். டாக்சி டிரைவர்கள் மீட்டர்களை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் புலம்பலாம்!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications