கள்ளக் காதலி போன்.. ஒரு கல்யாணம் காலி!

Subscribe to Oneindia Tamil


சென்னை: சென்னையில் வக்கீல் ஒருவரின் திருமணத்தை அவரது கள்ளக்காதலி போன் மூலம் தடுத்து நிறுத்தினார். மணமகன் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி மணமகள் வீட்டார் போலீஸில் புகார் கொடுத்தனர்.

சென்னை மகாகவி பாரதிநகரைச் சேர்ந்தவர் முகமது கவுஸ். இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுபைதா என்ற மகள் இருக்கிறார். சுபைதாவுக்கும், அறந்தாங்கியைச் சேர்ந்த வக்கீல் ஆல்வி (34) என்பவருக்கும், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

நேற்று காலை சென்னை எருக்கஞ்சேரியில் திருமணம் நடப்பதாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் முதல் நாள் இரவே மண்டபத்திற்கு வந்துவிட்டனர். இந்நிலையில் இரவில் மணமகளின் தந்தையான முகமது கவுஸிற்கு ஒரு போன் வந்தது.

அதில் பேசிய பெண் தன்னை தமிழரசி என்று அறிமுகம் செய்து கொண்டு, எனக்கும் ஆல்விக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. இருவரும் பல வருடமாக கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியுற்ற முகமது கவுஸ், இந்த தகவலை தனது நெருங்கிய உறவினர்களிடம் சொன்னார். ஆத்திரமடைந்த பெண் வீட்டார் ஆல்வியிடம் கேட்டனர்.

ஆனால் தமிழரசி யார் என்ற எனக்குத் தெரியாது என்று முதலில் ஆல்வி கூறியுள்ளார். ஆனால் அதன் பின்னர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகாரின் பேரில் உதவி கமிஷனர் விமலா, இன்ஸ்பெக்டர் பூங்காவனம் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று போலீஸார் போய் விட்டனர்.

சம்பந்தப்பட்ட தமிழரசியின் கணவர் இறந்து விட்டார். அவர் மூலம் 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 10 வருடங்களாக ஆல்வியுடன் கள்ளத் தொடர்பு கொண்டு குடும்பமும் நடத்தி வருகிறார்.

ஏகப்பட்ட பணம் செலவு செய்து ஏற்பாடு செய்த திருமணம் நின்றதால் ஆத்திரமடைந்த முகமது கவுஸ் தனது உறவினர்களோடு எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு மீண்டும் சென்று மணமகன் ஆல்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.

போலீசார் ஆல்வினை கைது செய்ய சென்றபோது, அவர்கள் தாங்கள் வந்த வேனிலேயே அறந்தாங்கிக்கு போய் விட்டனர். அவர்களை அறந்தாங்கி சென்று கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+