தென்காசி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தென்காசி:
தென்காசியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் தென்காசி நகரமே பரபரப்புக்குள்ளாகியது.
![]() |
தென்காசி, பாறையடி தெருவில் வட்டார போக்குவரத்து அலுவலகம்(ஆர்டிஓ) உள்ளது. இன்று காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு மர்ம போன் ஒன்று வந்தது.
போனில் பேசியவர் ஆர்டிஓ அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் அந்த குண்டு வெடிக்கும் என்றும் கூறினார்.
![]() |
இந்த தகவலை அடுத்து அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இது குறித்து தென்காசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் போலீசார் வந்து அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
சோதனைக்கு பின்னர்தான் இது வெறும் புரளியா அல்லது வெடிகுண்டை உண்மையிலேயே வைத்துள்ளார்களா என்பது பற்றி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தை பாறையடி தெரு பகுதியிலிருந்து மாற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த மிரட்டலை யாரோ உள்ளூர்வாசி தான் கொடுத்திருப்பார் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications