ஹைதராபாத்தில் அதிரடி சோதனை: இம்ரான்,br/ரிஸ்வான் வீடுகளில் வெடிபொருள் புதையல்!
ஹைதராபாத்:
ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான் மற்றும் தேடப்பட்டு வரும் ரிஸ்வான் காஜி ஆகியோரின் வீடுகளில் இன்று நடந்த சோதனையில் ஏராளமான வெடிபொருட்கள் சிக்கின.
கடந்த 25ம் தேதி ஹைதராபாத்தில் நடந்த இரட்டை வெடிண்டுச் சம்பவங்கள் தொடர்பாக சிறப்புபுப் புலனாய்வுப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ரிஸ்வான் காஜியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஹைதராபாத் போலீஸ் வசம் சிக்கியுள்ள இம்ரான் கானுக்கு நேற்று பெங்களூரில் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவர் பல முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இம்ரான் கான் மற்றும் ரிஸ்வானின் ஹைதராபாத் வீடுகளில் இன்று அதிரடி சோதனை நடைபெற்றது.
ரிஸ்வான் வீட்டில் நடந்த சோதனையில், வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் பால்ரஸ்கள், பைகள், வங்கதேச தொலைபேசி எண்கள் அடங்கிய டைரக்டரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இம்ரான் கான் வீட்டில் நடந்த சோதனையிலும் பல முக்கியப் பொருட்கள் சிக்கின. இதுதவிர ஒரு கிட்டங்கியிலும் போலீஸார் சோதனை போட்டனர். அப்போது அங்கு 2.8 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் சிக்கியது. இந்த வெடிபொருள்தான் ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெருமளவிலான வெடிபொருட்கள் சிக்கியுள்ளதால் ஹைதராபாத்தில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications