முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜெ.: நேரு தாக்கு
சென்னை:
தனது ஆட்சியில் ஒரு முறை கூட ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாத ஜெயலலிதா, இப்போது ஆட்டோ டிரைவர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இதை ஆட்டோ டிரைவர்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரு முறை கூட ஆட்டோ கட்டணத்தை ஜெயலலிதா உயர்த்தவில்லை. ஆனால் இப்போது ஆட்டோ டிரைவர்களுக்குப் பரிந்து பேசுவதாக காட்டிக் கொண்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறார். ஆனால் இதை ஆட்டோ டிரைவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், 56 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் ஆட்டோ கட்டணத்தை ஒருமுறை கூட ஜெயலலிதா திருத்தவில்லை, உயர்த்தவில்லை.
1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது, ஆட்டோ கட்டணத்தை உயர்த்தியது. அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சி, அதை அப்படியே கடைசி வரை வைத்திருந்தது. திருத்தவே இல்லை. உண்மை இப்படி இருக்க, ஏதோ, ஆட்டோ டிரைவர்கள் மீது தான் மிகவும் கவலையுடனும், அக்கறையுடனும் இருப்பது போல காட்டிக் கொள்ள முயலுகிறார் ஜெயலலிதா.
கடந்த மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தபோது, பல்வேறு ஆட்ேடா ஓட்டுநர் சங்கங்கள், நுகர்வோர் சங்கங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்த ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 14 என்றும், கூடுதல் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் ரூ. 6 என கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது.
சென்னையில் இந்த கட்டண மாற்றம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. பிற மாவட்டங்களில், சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய கட்டண விகிதத்தை அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கோவை மாவட்டத்தில், அம்மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில்தான் ஒரு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்துக்கு கோவை மாவட்ட திமுக ரூ. 55 ஆயிரம் குடும்ப நல நிதியாக வழங்கியது. அரசு நிதியுதவியும் விரைவில் வழங்கப்படவுள்ளது.
நிலைமை இப்படி இருக்க, ஆட்டோ டிரைவர்களின் ரட்சகர் போல தன்னைக் காட்டிக் கொண்டு செயல்பட நினைக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதைய யாரும் நம்பத்தான் போவதில்லை என்று கூறியுள்ளார் நேரு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications