திடீர் தேர்தல் வந்தால் காங். கூட்டணிக்குbr/மெஜாரிட்டி கிடைக்கும் - கருத்துக் கணிப்பு
டெல்லி:
நாடாளுமன்றத்திற்கு திடீர் தேர்தல் வந்தால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மோசமான தோல்வி கிடைக்கும். இடதுசாரிகளுக்கும் சரிவு உண்டாகும் என்று தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. ஆரம்பத்தில் எதிர்த்து வந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, அணு சக்தி ஒப்பந்தத்திற்கு பெருவாரியான மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதை அறிந்து தனது நிலையை மாற்றிக் கொண்டது.
அணு சக்தி ஒப்பந்தம் சூடு பிடித்துள்ள நிலையில் திடீர் தேர்தல் வந்தால் இடதுசாரிகளுக்கு சரிவு ஏற்படும், காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என சில கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் திடீர் தேர்தல் வந்தால் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகளின் உதவி இல்லாமலேயே பெரும்பான்மை பலத்தைப் பெறும் என புதிய
கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 மாநிலங்களில் 18 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் கிடைத்த கணிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 267 இடங்கள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது மெஜாரிட்டிக்கு 5 இடங்களே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 222 இடங்களைப் பிடித்தது.
இதேபோல, இடதுசாரிகளுக்கு 43 இடங்களே கிடைக்குமாம். கடந்த தேர்தலில் அவர்களுக்கு 53 இடங்கள் கிடைத்தன என்பது நினைவிருக்கலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் இப்போது தேர்தல் நடந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணிக்கு 133 இடங்களே கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 189 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதே தொலைக்காட்சி கடந்த ஜனவரி மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் உடனடியாக தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் 267 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. எனவே இது காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு வகையில் சரிவுதான்.
அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடந்த கருத்துக் கணிப்பில் 115 இடங்களே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 133 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால் இது பாஜக கூட்டணிக்கு சற்றே ஆறுதலான செய்திதான்.
இப்போது தேர்தல் நடந்தால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 35 இடங்கள் கிடைக்குமாம். தற்போது அக்கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 18 இடங்களே உள்ளன.
ஒரிசா, பீகார், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணியின் செல்வாக்கு வலுவாகியுள்ளதாம். அதேசமயம், தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள சில மாநிலங்களில் பாஜகவுக்கு சரிவு ஏற்படக் கூடும்.
குஜராத்தில் இன்னும் நரேந்திர மோடியின் செல்வாக்கு பாதிக்கப்படாமல் உள்ளதாம். 56 சதவீதம் பேர் மோடிதான் குஜராத்தின் சிறந்த முதல்வர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
64 சதவீதம் பேருக்கு அணு சக்தி ஒப்பந்தம் குறித்து சரியாகத் தெரியவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், இடதுசாரிகள் இடையே நடக்கும் சண்டையும் அவர்களுக்குப் புரியவில்லையாம்.
இப்போது தேர்தல் நடந்தால் பணவீக்கமும், விவசாயிகளின் பரிதாப நிலையும்தான் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதம், ஊழல், பண வீக்கம் ஆகிய பிரச்சினைகளில் சரியாக செயல்பட காங்கிரஸ் கூட்டணி அரசு தவறி விட்டதாகவும் பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதத்தைத் தடுப்பதில் காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்து விட்டதாக 44 சதவீதம் பேரும், ஊழல் மலிந்து விட்டதாக 49 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தி பிரதமராக 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications