வளைகுடாவில் தவிக்கும் ஆந்திர தொழிலாளர்கள்br/மீட்டு உதவ டி.ஆர்.எஸ். கோரிக்கை
ஹைதராபாத்:
வளைகுடா நாடுகளில் வேலைக்காக சென்று வேலை கிடைக்காமல் சிரமப்படும் ஆந்திர மாநில தொழிலாளர்களை ஆந்திராவுக்கு வரவழைத்து மாநில அரசு வேலை தர வேண்டும் என தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தெலுங்கான ராஷ்டிரி சமிதி கட்சியின் சட்டசபைத் தலைவர் விஜயராம ராவ் தலைமையிலான குழுவினர், முதல்வர் ராஜசேகர ரெட்டியை சந்தித்து மனு கொடுத்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில், ஆந்திராவைச் சேர்ந்த பலர், சரியானவேலை கிடைக்காமல், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மிகவும் சிரமமான நிலையில் வசித்து வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த 2 லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு வேலையும் இல்லை, சாப்பாட்டுக்கும் வழியில்லை.
வேலையை நம்பி அங்கு சென்று இவர்கள் ஏமாந்துள்ளனர். எனவே அவர்களை ஆந்திராவுக்கு மாநில அரசு திரும்ப அழைக்க வேண்டும். அவர்கள் மாநிலத்திற்குத் திரும்புவற்கான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரவழைத்து அவர்களுக்கு வேலையும் தர வேண்டும்.
இதேபோன்று கேரளா மற்றும் தமிழக அரசுகள் செய்துள்ளன. தெலுங்கான பகுதியைச் சேர்ந்த 1.5 லட்சம் தொழிலார்கள் வளைகுடா நாடுளில் சிரம நிலையில் உள்ளனர். எங்களது கோரிக்கை குறித்து உரிய முறையில் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்துள்ளார் என்றார் ராவ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications