இரவு 11 மணிக்கு மேல் பார் திறப்புbr/10 டாஸ்மாக் ஊழியர்கள் கைது
திருநெல்வேலி:
அரசு உத்தரவை மீறி இரவு 11 மணிக்கு மேலும் டாஸ்மாக் மது பார்களை திறந்து வைத்திருந்த டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் மதுகடைகள் செயல்பட்டு வருகின்றன. முன்பு காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை இக்கடைகள் செயல்பட்டு வந்தன.
இதையடுத்து வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தினார்.
இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணியாக மாற்றி அரசு அறிவித்தது. குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி கடைகள் மற்றும் பார்கள் திறந்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு போலீசார் டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில், மது விலக்கு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் உமா தலைமையிலான போலீசார் பாளை, ஜங்ஷன், மேலப்பாளையம், டவுண், பெருமாள்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 5 பார்கள் இரவு 11 மணிக்கு மேல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த காந்திமதி நாதன், தாஸ், செல்லப் பாண்டியன், பரமசிவன், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம், செல்வம், அப்துல் சலீம், முருகன், குமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 76 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications