'பராசக்தி' மேடை இடிப்பு - பவானியில் பரபரப்பு
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பராசக்தி மேடையை சில விஷமிகள் இடித்ததால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
ஈரோடு மாவட்டம் பவானியில், சுதந்திர போராட்ட பராசக்தி மைதானம் என்ற மைதானம் உள்ளது. இது 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 30 அடி உயரமும் 10அடி அகலமும் கொண்டது.
இந்த மேடைக்கு பெரிய வரலாறு உண்டு. அதாவது சுதந்திர போராட்ட காலத்தில், இங்கு பல கூட்டங்கள் நடக்குமாம். இந்த மேடை மீது ஏறி நின்று தான் வந்தே மாதரம் பாடலைப் பாடுவார்களாம்.
மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, சத்தியமூர்த்தி, போன்றவர்கள் இந்த மேடையில் இருந்தபடி தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். இதனால் இந்த பராசக்தி மைதானத்திற்கு பவானி பகுதி மக்களிடையே தனி மரியாதை உண்டு.
இந்நிலையில் நள்ளிரவில் சுதந்திர போராட்ட பராசக்தி மைதான மேடையை சிலர் இடித்து விட்டுச் சென்று விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கேள்விப்பட்ட மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். தியாகி சீனிவாசன் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தார். மேடையை இடித்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications