தொழில்மயமாக்கலை ஊக்கப்படுத்த தமிழக அரசுbr/அமைக்கும் 10,000 சமுதாய மையங்கள்!
சென்னை:
தமிழகத்தில் தொழில்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடையே கொண்டு செல்ல 10,000 சமுதாய சேவை மையங்களைத் தொடங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இந்திய தொழிலக சம்மேளனத்தின் (சிஐஐ) தமிழகப் பிரிவின் சார்பில் வருடாந்திர தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறை மாநாடு 'கனெக்ட் 2007' நடந்தது.
மாநாட்டின் நோக்கம் குறித்து சிஐஐ (தமிழகம்) தலைவர் கோபால் சீனிவாசன் கூறுகையில், தமிழகத்தில் தொழில்மயமாக்கல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே தெரிவிக்க, 10 ஆயிரம் சமுதாய சேவை மையங்களைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
இதுதவிர, சிஐஐயுடன் இணைந்து, சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கும் பள்ளிகளைத் தொடங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிஐஐ முன்னாள் தலைவருமான சேஷசாயி கூறுகையில், நிலையான வளர்ச்சிக்கு, மூலாதரப் பெருக்கமும், ஒருங்கிணைந்த செயல்பாடும் அவசியம். இதை ஊக்குவிக்க அறிவுசார் நிறுவனங்களை அதிக அளவில் தொடங்குவது அவசியம் என்றார்.
டி.சி.எஸ். நிறுவன தலைமை நிதி அதிகாரியும், மாநாட்டின் தலைவருமான மகாலிங்கம் கூறுகையில், தகவல், தொடர்பு தொழில்நுட்பத் துறைக்கு தமிழகம் சிறந்த களமாக விளங்குகிறது என்றார்.
தென் பிராந்திய சிஐஐ தலைவர் பி.கே.மொஹபத்ரா கூறுகையில், தமிழகத்தில் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் உற்பத்திக்குத் தேவையான திறமையாளர்கள் அதிகம் உள்ளனர். இதை உருவாக்கிய தமிழக அரசு பாராட்டுக்குரியது என்றார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்கள் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் பாராட்டினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications