கருணாநிதியுடன் அன்புமணி சந்திப்பு-நவம்பரில் சேலம் ரயில் கோட்டம்
சென்னை:
சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் ரயில் கோட்டம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை சமீபத்தில் ஒரு மாதிரியாக முடிவுக்கு வந்தது. அதன்படி பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளை கேரளாவுக்கு தாரை வார்க்க தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தத்தில் திமுக கூட்டணி எம்.பிக்கள் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா எப்போது நடக்கும் என்பது குறித்து தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அமைச்சர் அன்புமணி இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ரயில்வே இணை அமைச்சர் வேலுவும் உடன் இருந்தார்.
பின்னர் வெளியில் வந்த அமைச்சர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நவம்பர் முதல் வாரத்தில் சேலம் ரயில் கோட்டத் தொடக்க விழா அனேகமாக நடைபெறும். இதில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கலந்து கொள்கிறார். முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications