பெங்களூரில் தமிழக அரசுப் பேருந்து தீவைத்து எரிப்பு - 2 பேர் பரிதாப சாவு
பெங்களூர்:
பெங்களூரில், முதல்வரின் மகள் செல்வி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்ட சில மணி நேரங்களில், தமிழக அரசு விரைவுப் பேருந்தை ஒரு கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சைத் தொடர்ந்து மடிவாளா பகுதியில், தமிழக அரசு விரைவுப் பேருந்தை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி தீவைத்து எரித்தது.
நேற்று இரவு பெங்களூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவுப் பேருந்து கிளம்பியது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரவு 9.45 மணியளவில் பேருந்து, ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹள்ளி பகுதியில், ஆக்ஸ்போர்ட் கல்லூரி அருகே வந்தது.
அப்போது ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி பஸ்சுக்குத் தீவைத்து விட்டு ஓடி விட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையிலும் பேருந்துக்குத் தீவைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
வேகம் வேகமாக பேருந்திலிருந்து அனைவரும் இறங்கினர். ஆனால் 2 பேர் மட்டும் பேருந்திலிருந்து இறங்க முடியாமல் சிக்கி உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தையும் அடக்கம் என்று கூறப்படுகிறது.
நடுச் சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் அந்த வழியாக போனவர்கள் விரைந்து வந்து பயணிகள் கீழே இறங்க உதவி செய்தனர்.
இந்த சம்பவத்திற்கும் வி.எச்.பியினரே காரணமாக இருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. முதலில் இது விபத்து என்று கூறப்பட்டது. ஆனால் பேருந்தின் டிரைவர்தான், ஒரு கும்பல் வழிமறித்து தீவைத்ததாக தெரிவித்தார். இதையடுத்தே இது திட்டமிட்ட சம்பவம் என்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தையடுத்து தமிழகத்திலிருந்து பெங்களூர் வந்து கொண்டிருந்த அனைத்து அரசுப் பேருந்துகளும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. நேற்று இரவு முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிற தனியார் வாகனங்களும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இயக்கப்படவில்லை.
இதேபோல நீலகிரி மாவட்டத்திலில் உள்ள கர்நாடக எல்லை வரை மட்டுமே தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கர்நாடகத்திற்குள் அரசுப் பேருந்துகள் செல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications