வகுப்பறையில் சாமியாடிய மாணவர்கள்!
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பள்ளிக்கூடத்தில் நடந்த கிறிஸ்தவ ஜெபக் கூட்டம் மற்றும் வகுப்பறையில், மாணவர்கள் எழுந்து அருள் வந்தது போல ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ளது பண்டாரபுரம். இந்த ஊரைச் சேர்ந்த கென்னடி என்பவரது மகன் கிளிண்டன். இவர் சத்யநகரம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் 7 வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சனிக்கிழமை பள்ளியில் ஜெபக் கூட்டம் நடந்தபோது மாணவன் கிளிண்டன் திடீரென கூட்டதுக்கு மத்தியில் சாமியாடினார். இதனால் ஜெபக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிளிண்டனை வீட்டுக்கு தூக்கி சென்றனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஸ்பெஷல் வகுப்பு நடந்தது. அப்போது கிளிண்டன் மீண்டும் சாமியாடினார். இதை தொடர்ந்து ஸ்பெஷல் வகுப்பு ரத்து செய்யப்பட்டது.
திங்கள்கிழமை வகுப்பு நடந்தபோது கிளிண்டன் தவிர 5 மற்றும் 6ம் வகுப்பை சேர்ந்த மேலும் 4 மாணவர்கள் அருள் வந்து ஆடத் தொடங்கினர்.
ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருந்தபோது வெவ்வேறு வகுப்பறைகளில் ஓரே சமயத்தில் இவர்கள் சாமியாடியது சக மாணவர்களை பீதியடைய செய்தது.
இதையடுத்து 5 மாணவர்களும் தத்தம் வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications