10 ரூபாயை பறக்க விட்டு ரூ. 3.50 லட்சம் அபேஸ்
கரூர்:
கரூர் பேருந்து நிலையம் அருகே பத்து ரூபாய் தாள்களை பறக்க விட்டு விட்டு ரூ. 3.50 லட்சம் பணத்தை ஒரு தம்பதியிடமிருந்து மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் தாந்தோனி ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் வாங்கிலியப்பன். இவரது மனைவி ஜெயலட்சுமி. வாங்கிலியப்பன் டெம்போ வைத்து தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் கண்ணன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி திருமணம் நடந்தது. இதற்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ. 5 லட்சத்தை ஒரு தனியார் பைனான்சில் பெற்றனர். அப் பணத்தில் நேற்று பர்னீச்சர் வாங்க கோவை ரோட்டில் உள்ள கடைக்கு சென்றனர்.
மதியம் கரூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஒட்டலில் சாப்பிட்டனர். குடும்பத்தினருடன் வாங்கிலியப்பன் வெளியே வந்து காரில் ஏற முயன்றார்.
அப்போது ஒருவர் தான் வைத்திருந்த பத்து ரூபாய் தாள்களை கீழே போட்டார். இதைப் பார்த்த சிலர் கீழே குணிந்து பணத்தை எடுத்தனர். வாங்கிலியப்பனும் அதை வேடிக்கை பார்த்துள்ளார்.
அந்த சமயத்தில், ஜெயலட்சுமி கையில் இருந்த பணப் பையை அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் பறித்துக் கொண்டு புயல் வேகத்தில் தப்பி விட்டார்.
பத்து ரூபாயை பறக்க விட்டு லட்சக்கணக்கான ரூபாயை பறித்துச் சென்ற இந்த நூதனக் கொள்ளை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications