பொள்ளாச்சியில் ரயில் மறியல் செய்த வைகோ கைது
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் இன்று ரயில் மறியல் செய்த வைகோ உட்பட 1,000க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கோட்டம் அமைப்பதற்காக மதுரை கோட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்திற்கு தாரை வார்த்ததற்காக இன்று மதிமுக சார்பில் பொள்ளாச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.
இதற்காக கொட்டும் மழையில் அதிகாலை 5 மணி முதல் திருவள்ளுவர் திடலில் மதிமுக, அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய வைகோ,
பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை பாலக்காடு கோட்டத்திலிருந்து மீட்கும் வரை மதிமுகவின் போராட்டம் தொடரும் என்றார்.
பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு வைகோ தலைமையில் பேரணி புறப்பட்டது. பேரணியை அதிமுக அமைப்பு செயலாளர் கரூர் சின்னச்சாமி தொடங்கி வைத்தார். 7.30 மணிக்கு பேரணி பொள்ளாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடுக்கு பயணிகள் ரயில் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த ரயிலின் முன்பு வைகோ உட்பட தொண்டர்கள் அனைவரும் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் சிறிது நேரத்திலேயே திண்டுக்கல்லில் இருந்து போத்தனூருக்கு செல்லும் ரயில், மற்றும் பாலக்காட்டிலிருந்து திண்டுக்கல் செல்லும் ரயில் வந்தது. அந்த ரயில்களின் முன்பும் மதிமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வைகோ உட்பட 1,000க்கும் மேற்பட்ட அதிமுக, மதிமுக தொண்டர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த ரயில் மறியலால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அனைத்து ரயில்களும் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து:
ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டிற்கு எதிராக மத்திய அரசு கொடுக்கும் தாக்குதலை வேரோடு தகர்த்து எறியும் தங்களது போராட்டம் வெற்றி பெற தங்களுக்கும், மதிமுக தொண்டர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications