தேர்தலுக்கு பாஜக தயார் - ரவிசங்கர் பிரசாத்
திருநெல்வேலி:
பாராளூமன்ற மன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் அகில இந்தியச் செயலாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பாஜக சேது சமுத்திர திட்டத்திற்கு எதிரானது அல்ல. ராமர் பாலத்தை சேதப்படுத்தாமல் திட்டத்தை நிறைவேற்றுவதையே கட்சி ஆதரிக்கிறது.
மாற்றுப் பாதை வழியாக திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புகள் இருக்கும்போது, திட்டத்தை விரைவாக்கி ராமர் பாலத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன. ராமர் பாலம் இருக்கிறதா என்று காங்கிரஸ் கட்சியினர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். நாடு முழுவதும் எழுந்த கண்டனத்தை அடுத்து அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
மற்ற மத தெய்வங்களை சுட்டிகாட்டி இவ்வாறு மனு தாக்கல் செய்ய முடியுமா. இது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை மிகவும் புண் படுத்தியுள்ளது. மத ரீதியாக அடுத்தவர்கள் உணர்வை புண்படுத்துபவர்களுக்கு 3 வருடம் சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனவே இதற்காக சோனியா, மன்மோகன் சிங், மன்னிப்பு கேட்க வேண்டும். தீவிரவாதமற்ற வலுவான பாரதத்தையும் வலுவான தமிழகத்தையும் உருவாக்கவே பாஜக விரும்புகிறது.
மத்தியில் உள்ள காங்கிரஸ், கம்னியூஸ்ட் கூட்டணி கட்டாயத்தால் ஏற்பட்ட கூட்டணி. இக்கூட்டணி நீண்டகாலம் நீடிக்காது. எந்த நேரத்திலும் பாராளுமன்ற தேர்தல் வரலாம். அதற்கு பாஐக தயாராக உள்ளது.
சென்னையில் ஜெயலலிலாதவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். வேறு எதுவும் காரணம் கிடையாது என்றார் அவர்.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications