திருவிழாவில் பட்டாசு வெடித்து 7 பேர் பலி
சென்னை:
சென்னை அருகே மீனவ கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, எண்ணூர் அருகே உள்ள தாழங்குப்பம் மீனவ கிராமத்தில் கோவில் திருவிழா நடந்தது. அப்போது வான வேடிக்கை நடத்தப்பட்டது. திருவிழாவில் கலந்து கொள்வதை விட இந்த வான வேடிக்கையை காண்பதற்கு சுற்று வட்டாரங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர்.
வானில் வெடித்து பூக்கள் போல் சிதறிய பட்டாசுகளை பார்த்து உற்சாகத்துடன் கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர். இவர்களின் ஆரவாரம் வெகு நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் வான வேடிக்கைக்காக பற்ற வைத்த ஒரு சக்தி வாய்ந்த பட்டாசு வானில் சீறி பாய்வதற்கு பதிலாக கூட்டத்தில் பாய்ந்து வெடித்து சிதறியது.
பட்டாசு கூட்டத்திற்குள் பாய்ந்ததும் அனைவரும் சிதறி ஓடினார்கள். பட்டாசு வெடித்ததில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில் திருவல்லிக்கேணி மேட்டுக்குப்பத்தை சேர்ந்த மதி என்பவரது மனைவி ஈஸ்வரி (45) அதே இடத்தில் பலியானார்.
தீக்காயம் அடைந்து ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஜெகநாதன் (14), செல்வஅரசு (52), வானதி(35), ஆறுமுகம் (30), தீபன் (10) மற்றும் சிவகாமி (35) ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டனர். இறந்தவர்களில் வானதி மற்றும் தீபன் ஆகியோர் தாயும், மகனும் ஆவர்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications