சந்தன மரம் கடத்திய சகோதரர்கள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சந்தன மரம் கடத்திய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான நிலப்பரப்பில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம், ஈட்டி உள்ளிட்ட மரங்கள் உள்ளன.
இம்மலை பகுதியில் களக்காடு உள்ளிட்ட சில பகுதிகளில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சிவப்புரத்தை சேர்ந்த தங்கபாண்டி, பாலகிருஷ்ணன் சகோதரர்கள் 10 கிலோ எடை கொண்ட சந்தன மரத்துண்டு கட்டையோடு வந்ததைப் பார்த்த வனத்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சந்தனமரம் கடத்தி பிடிபட்ட இருவரும் சகோதரர்களாம். தமிழக காட்டு பகுதியில் இருந்து சந்தன மரத்தின் வைரம் நிறைந்த பகுதிகளை வெட்டி எடுத்து கேரளாவுக்கு விற்பனை செய்வதாகவும், அங்கு நல்ல விலை கிடைப்பதும் குறித்து தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சந்தன மரக் கடத்தலில் கேரள கும்பலுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பிடிபட்ட சகோதரர்களிடம் கேரள கும்பல் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இப்பகுதியிலிருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications