செல்வி வீடு தாக்குதல்: பஜ்ரங் தள், வி.எச்.பி, ராமசேனா தொண்டர்கள் 10 பேர் கைது!
பெங்களூர்:
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் பெங்களூர் வீட்டில் நடந்த தாக்குதல் தொடர்பாக பஜ்ரங் தள், விஸ்வ இந்து பரிஷத், ராம சேனா ஆகிய அமைப்புளைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் வசித்து வரும் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி வீட்டில் ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
வீட்டில் பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. இது நடந்த சில மணி நேரங்களில் பெங்களூரிலிருந்து சென்னை சென்ற தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை தடுத்து நிறுத்தி ஒரு கும்பல் தீவைத்தது. அதில் 2 பயணிகள் பரிதாபமாக இறந்தனர்.
செல்வி வீடு மீதான தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் தற்போது 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விஸ்வ இந்து பரிஷத், ராமசேனா, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் ேசர்ந்தவர்கள் ஆவர். மேலும் 5 பேருக்கும் வலை வீசப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு பயணியின் அடையாளம் தெரிந்தது:
இதற்கிடையே பஸ் தீவைப்பு சம்பவத்தில் பலியான இருவரில் ஒருவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. அவரது பெயர் கருப்பசாமி. நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்.
அவரது குடும்பத்தினர் கருப்பசாமியின் அடையாளம் காட்டியுள்ளனர். மற்றொரு பயணியின் அடையாளம் இன்னும் தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications