சேது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி இனி போராட்டம் - கருணாநிதி
சென்னை:
வேதாந்திக்கு எதிரான போராட்டம் தொடராது. ஆனால் சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றக் கோரி திமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அவர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தின் பாதையை மாற்றுவதில், பாலத்தை இடிக்காமல் அதை நிறைவேற்றுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை வேறு யாரும் தீர்மானிக்கக் கூடாது, பொறியாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
வேதாந்தியின் கொலை மிரட்டலைக் கண்டித்து நடந்தது ஒரு நாள் போராட்டம்தான். அது முடிந்து விட்டது. இனி தொடராது. இனி திமுகவினர் போராட்டம் நடத்துவதாக இருந்தால், அது சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கும்.
காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தில் மெளனமாக இருப்பதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பது காரணமாக இருக்கலாம். மற்றபடி நீங்கள் (பத்திரிக்கையாளர்கள்) நினைப்பது போல எங்களுக்குள் வேறு எந்த கருத்து வேறுபாடும் இல்லை, கவலைப்படாதீர்கள் என்றார் முதல்வர்.
நான் ஃபாத்வா விதிக்கவில்லை என்று வேதாந்தி மறுத்துள்ளாரே என்று கேட்டதற்கு, அதுகுறித்து நான் பதில் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications