யுஏஇ-மாடி ஜன்னலிலிருந்து விழுந்து சிறுவன் பலி
அல் அய்ன்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் அய்ன் நகரில், சூடான் நாட்டைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன், ஜன்னலிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.
முகம்மது என்கிற அந்த நான்கு வயது சிறுவன், தனது பெற்றோருடன், முசாஃபா என்ற பகுதியில் வசித்து வந்தான்.
சிறுவனின் தாயார் வீட்டில் சமையல் செய்து ெகாண்டிருந்தார். அப்போது முகம்மது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளான். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக தவறி தலைகுப்புற கீழே விழுந்து விட்டான்.
இதையடுத்து மாடியிலிருந்து சிறுவனின் தாயார் வேகமாக கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது முகம்மது ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தான்.
உடனடியாக அல் மஃப்ராப் மருத்துவமனைக்கு அவனை கொண்டு ெசன்றனர். ஆனால் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்து ேபானான்.
மிகவும் துறுதுறுப்பாக இருக்கும் முகம்மதுவின் இந்த அகால மரணத்தால் அவனது குடும்பத்தினர் இன்னும் சோகத்திலிருந்து மீளாமல் துயரத்தில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications