கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் முன்னாள் ஜன்சங் எம்.பி!
சாகர் (ம.பி):
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் ஜன் சங் எம்.பி. ராம் சிங் அஹிர்வார் என்பவர், கிறிஸ்தவ மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளார். தான் ஒரு தலித் என்பதால் பாஜக தன்னைப் புறக்கணிப்பதால் இந்த மத மாற்ற முடிவுக்கு வந்ததாக அஹிர்வார் கூறியுள்ளார்.
1967ம் ஆண்டு சாகர் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு ஜன் சங் (பாஜகவின் தாய்க் கட்சி) சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஹிர்வார். 72 வயதாகும் அஹிர்வார், தனது மதமாற்றம் குறித்துக் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் மற்றும் பாஜக ஆகியவற்றிலிருந்து நான் நிறைய மரியாதையை எதிர்பார்த்தேன்.
ஆனால் பாஜகவின் தலித் விரோத கொள்கையில் இன்னும் எந்த மாற்றமும் இல்லை. இது என்னை வருத்தமடைய வைத்துள்ளது. தலித்துகளின் உயர்வுக்காக பாஜக தீவிரமாக பாடுபடவில்லை.
பாஜக நிர்வாகம் என்னை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. நான் பாஜகவில் உறுப்பினராகாவிட்டாலும் கூட ஜன் சங்கின் ஆரம்ப கால உறுப்பினர் என்ற மரியாதையைக் கூட பாஜகவினர் எனக்குத் தர மறுக்கின்றனர்.
இதனால் மனம் வெறுத்துள்ள நான் கடந்த 2 ஆண்டுகளாக சர்ச்சுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளேன். விரைவில் மதம் மாறவுள்ளேன். எப்போது மதம் மாறுவது என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
1963ம் ஆண்டு தீவிர அரசியலுக்கு வந்தேன். தீண்டாமை மற்றும் சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் எண்ணத்துடன் அரசியலுக்கு வந்தேன்.
ஆனால் தலித்துகள் இன்னமும் தீண்டத்தகாதவர்களாகவே இருப்பது என்னை வேதனைப்பட வைத்துள்ளது. தீண்டாமைப் பேயின் பிடியில் நானே பலமுறை சிக்கியது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சமூக, அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து நீண்ட நாட்களாக பாஜகவின் மீது நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் அவர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால்தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறத் தீர்மானித்தேன்.
எனது வாழ்க்கையின் கடைசிக் காலத்திலாவது நிம்மதியுடனும், புறக்கணிப்பு தளையிலிருந்து விடுபட்டும் கழிக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார் அஹிர்வார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications