முன்னாள் பாஜக தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி மரணம்
சென்னை:
பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனா. கிருஷ்ணமூர்த்தி இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 79.
1928ம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி. சட்டம் பயின்ற ஜனா, வக்கீலாக பணியாற்றினார். பின்னர் ஜன சங்கத்தில் இணைந்து அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் ஜனதாக் கட்சி மற்றும் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டார்.
2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக செயல்பட்டார்.
பாஜக தலைவராகவும் ஜனா. கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டுள்ளார். காமராஜருக்குப் பிறகு தேசியக் கட்சி ஒன்றின் தலைவராக பதவி வகித்த ஒரே தமிழர் ஜனா கிருஷ்ணமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரும் அவர்தான்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை இழந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் ஜனா. கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயல் இழந்தன. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
நெல்லை வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானி, சென்னை வந்து ஜனாவைப் பார்த்தார். இந்த நிலையில் இன்று காலை ஜனா கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
அவருக்கு மனைவி, 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். ஜனா. கிருஷ்ணமூர்த்தியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications