தமிழக-கேரள போக்குவரத்து 12 மணி நேரம் பாதிப்பு
தென்மலை:
கேரள மாநிலத்தில் வாகனம் பழுதானதால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
![]() |
| Click here for more images |
மதுரை மாவட்டம், திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கேரள மாநிலம் ஆரியங்காவிலிருந்து புனலூர் வரையிலுள்ள 35 கிமீ தூரம் மலை வழி சாலை ஒரு வழிப்பாதை உள்ளது.
இப்பாதை வழியாகத்தான் கொல்லம் கொச்சி துறைமுகம், திருவனந்தபுரம் விமான நிலையம் போன்ற பகுதிகளுக்கு தூத்துக்குடி துறைமுகத்திலிருந்தும், மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களும் பேரூந்துக்கள், கார் போன்றவைகளும் சென்று வருகி்ன்றன.
இச்சாலை கடந்த 3 மாதங்களாகவே பழுது ஏற்பட்டு லேசான குண்டும், குழியுமாக காட்சியளித்தது. பெரும் சிரமத்தோடு வாகன ஓட்டிகள் சென்று வந்த நிலையில் கடந்த மாதம் ஆரியங்காவு, தென்மலை பகுதிகளிலுள்ள பல உள்ளூர் வி.ஐ.பிக்கள் குண்டும், குளியுமான சாலைகளில் மண் அள்ளி போட்டு நிரப்பி அவ்வழியே வரும் வாகனங்களில் இஷ்டம் போல் கெடுபிடி வசூலை நடத்தினர்.
ஆனால் அடுத்து பெய்த மழையில் அவர்கள் போட்ட மண் மீண்டும் தண்ணீரில் அரித்து செல்லப்பட்டு சாலைகள் மேலும் குண்டும், குழியுமாகி மாறியது.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஆரியங்காவை அடுத்த கழதுருட்டி 13 கண் ரயில்வே பாலத்தையும்-தென்மலை ஆறுக்கும் இடையே உள்ள இச்சாலையில் மோசமான குழியில் செல்லும் போது ஒருசரக்கு வாகனம் ஆக்ஸில் உடைந்து நடுரோட்டில் தீடீரென நின்றதால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் ஆயிரக்கனக்கான வாகனங்களும் கேரளாவிலிருந்து தமிழகம் செல்லும் ஆயிரக்கனக்கான வாகனங்களும் இரு புறங்களில் அகல முடியாத நிலையில் சிக்கி தவித்தன.
தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் இன்று காலை 8 மணியளவில் பழுதான லாரியை சரி செய்து அப்புறப்படுத்தினர். சுமார் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஏராளமானோர் பெரும் பாதிப்பினை அடைந்தனர். மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் திருவிழாவான மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை போன்றவைகள் வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுதாகரன், தமிழகத்தில் முக்கியமாக செங்கோட்டை புனலூர் வழியாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அதிகம்.
கடந்த ஆண்டு 4 கோடி பேர் வந்தனர். இந்த ஆண்டு சுமார் ஐந்தரை கோடி பேர் சபரிமலை வருவார்கள். மொத்தம் ரூ.120 கோடி வருமானம் கோவிலுக்கு கிடைத்தது.
செங்கோட்டை-புனலூர் இடையே சாலைகளை சீரமைக்க ரூ.17.5 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சபரிமலை சீசன் தொடங்கிட இன்னும் 1 மாதமே உள்ள நிலையில் மோசமான சாலையாக இச்சாலை மாறி வருவதால் விரைவாக சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
