முஷாரப்புக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும் பெனாசிர்

Subscribe to Oneindia Tamil


வாஷிங்டன்:

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் முஷாரப்புக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவும் வேட்பாளரை நிறுத்துகிறார். பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி துணைத் தலைவர் மக்தூம் அமீன் பாஹிம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

1999ம் ஆண்டு ரத்தம் சிந்தாத ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார் ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த முஷாரப். பின்னர் அதிபராகவும் தன்னை அறிவித்துக் ெகாண்டார். ராணுவத் தளபதி பதவியிலும் தொடருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் அதிபராக முயற்சித்து வருகிறார் முஷாரப். ஆனால் அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பாகிஸ்தான் வக்கீல்கள் எல்லாம் சேர்ந்து முன்னாள் நீதிபதி வஜூதின் அகமதுவை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெனாசிர் பூட்டோவும் தனது கட்சி சார்பில் வேட்பாளரை அறிவித்துள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பெனாசிர் பேசுகையில்,

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் மக்தூம் அமீன் பாஹிம் வேட்பாளராக போட்டியிடுவார். அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெறுவதற்கான ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது.

பாகிஸ்தானில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு தருவதை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்வது வருத்தம் தருகிறது. முஷாரப்பை தற்போது ஆதரித்து வரும் அமெரிக்கா, இதற்கு முன்பும் 3 சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு தந்தது.

எனக்கும், முஷாரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் முஷாரப் கட்சியில் உள்ள சில தீவிரவாத எண்ணம் கொண்ட தலைவர்கள் அதை குலைத்து விட்டனர்.

மக்களுக்கு உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முஷாரப் தவறி விட்டார். மேலும் தீவிரவாதிகளையும் கட்டுப்படுத்த அவர் தவறி விட்டார் என்றார் பூட்டோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+