சேது திட்டத்தை எதிர்க்கவில்லை: பாதையை மாற்றவே கோருகிறோம்-பாஜக
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தின் பாதையை மாற்றத்தான் பாஜக கோரி வருகிறது. மாறாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவே கூடாது என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராமர் பாலத்தின் பாதுகாப்பு குறித்துத்தான் பாஜக கவலைப்படுகிறது. ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் மாற்றுப் பாதையில் கால்வாய் அமைக்கவே நாங்கள் கோரி வருகிறோம். மற்றபடி சேது சமுத்திரத் திட்டத்மே கூடாது என்று நாங்கள் கூறவில்லை.
இந்தத் திட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்க வேண்டும். இதை யாருமே எதிர்க்க மாட்டார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எங்ளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது எங்களை வருத்தமடையச் செய்கிறது.
அக்டோபர் 1ம் தேதி திமுக பந்த் அறிவித்துள்ளது நீதித்துறையை அவமதிக்கும் செயல். நீதித்துறையை குறைத்து மதிப்பிடும் செயலாகும். இது சட்டவிரோதமான பந்த். ஒரு கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதுவே பந்த் நடத்த அழைப்பு விடுப்பது சட்டவிரோதமாகும். மேலும் தற்போது ராமர் பால பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே இந்த பந்த் முழுக்க முழுக்க நீதித்துறைக்கே எதிரானது.
தமிழகத்தில் தொடர்ந்து பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து விவாதிக்க தலைவர்கள் கூட்டத்தை ராஜ்நாத் சிங் கூட்டியுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதில் விவாதிப்போம் என்றார்.
இதற்கிடையே, தமிழகத்தில் பாஜக அலுவலகங்கள் தாக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து புகார் மனு தர பாஜக முடிவு செய்துள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications