வேதாந்தி மீது நெல்லை கோர்ட்டில் வழக்கு

Subscribe to Oneindia Tamil


திருநெல்வேலி:

முதல்வர் கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த வேதாந்தியை கைது செய்து ஆஜர்படுத்திட கோரி நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராமல் பாலம் பற்றிய முதல்வர் கூறிய கருத்துக்கு பாஜ முன்னாள் எம்.பி வேதாந்தி முதல்வருக்கு கொலை மிரட்டல் விட்டதால் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே கடும் கொத்தளிப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் பா.ஜ.மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.அலுவலகம் தாக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இந்நிலையில் வேதாந்தியை கைது செய்து ஆஜர் படுத்தக்கோரி பாளையைச் சேர்ந்த வக்கீல் வின்சர் என்பவர் நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்ததின் மூலம் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பெரிய தலைவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமகனுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சட்டத்தை பற்றி தெரிந்த ஒருவர் இவ்வாறு பேசியிருப்பதால் அவர் மீது கோர்ட் மூலம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் வழக்கு போட்டிருப்பதால் பயன் எதுவும் இல்லை. எனவே வேதாந்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+