பஞ். தலைவர் பதவியை காத்த பெரியசாமி!
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மல்லிகாவுக்கு எதிராக கூட்டணிக் கட்சியான திமுகவினரே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி தலையிட்டு மல்லிகாவின் பதவியைக் காப்பாற்றினார்.
கோவில்பட்டி நகராட்சித் தலைவராக இருப்பவர் மல்லிகா. இவர் மீது நம்பிக்கை இல்லா கொண்டு வர திமுக, அதிமுக, மதிமுக என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த கவுன்சிலர்கள் முடிவு செய்தனர். மல்லிகாவின் கட்சியும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக திருநெல்வேலி நகராட்சி மண்டல இணை இயக்குனரிடம் 26 கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.
20ம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் இணை ஆணையர் மோகன் விடுப்பில் போய் விட்டார்.
இதனால் கவுன்சிலர்கள் குழப்பமடைந்தனர். கடைசியில்தான் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமியின் தலையீடு இதில் இருந்தது தெரிய வந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகராட்சித் தலைவர் பதவியை காக்கும்படி மேலிடத்திலிருந்து பெரியசாமிக்கு உத்தரவு வந்ததாம்.
இதையடுத்து அவர் இணை இயக்குநரை விடுமுறையில் போகுமாறு அறிவுறுத்தினாராம். இதன் மூலம் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நகராட்சித் தலைவியின் பதவியைக் காப்பாற்றி கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளாராம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications