கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல்
திருநெல்வேலி:
சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.77 லட்சம் கையாடல் செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தென்காசி அருகே சாம்பவர் வடகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளராக ஆண்டபெருமாள், கேஷியராக மாடசாமி, முதுநிலை எழுத்தாளராக முகமது கனி, நகை மதிப்பிட்டாளராக அருணாசலம் ஆகியோர் உள்ளனர்.
இந்த வங்கியை தென்காசி கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது வங்கியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தது. குறிப்பாக நகை கடன் வாங்கியதாக போலி கணக்கு எழுதி ரூ.32.74 லட்சம் கையாடல் நடந்தது தெரிய வந்தது.
அரசின் தள்ளுபடி திட்டத்தில் விவசாய நகைக் கடனில் போலியாக கையெழுத்திட்டு ரூ.8.58 லட்சமும் சுருட்டப்பட்டது தெரியவந்தது.
பல்வேறு முறைகேடுகளால் ரூ.77 லட்ம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து துணைப் பதிவாளர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் அருணாசலம் நெல்லை 2வது நீதிதுறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தார்.
இவரை அக். 9ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) ஹேமா உத்தரவிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications