ஈரான்: 12 பெண்களைக் கற்பழித்த 3 பேருக்கு பொது இடத்தில் தூக்கு!
டெஹ்ரான்:
ஈரானில் 12 இளம் பெண்களை கடத்திக், கற்பழித்து, கொள்ளை அடித்த 3 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஹாதி ஜபர்தபார், மிர்ஹாதி மிர்தாகி, செய்யத் ஷோஜா மெளஸாசாதே ஆகிய அந்த மூன்று பேரும், 3 ஆண்டுகளுக்கு இந்தக் குற்றங்களைச் செய்யத் தொடங்கினர்.
முதலில் பெண்களிடம் நைச்சியமாக பேசிக் கடத்திச் செல்வர். பின்னர் கற்பழித்து விட்டு அவர்கள் வைத்திருக்கும் பொருட்கள், பணத்தை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.
இவர்களிடம் சிக்கிய ஒரு பெண், கற்பழிப்பிலிருந்து தப்பிப்பதற்காக பெரும் பணத்தைக் கொடுத்து மீண்டார். அவர் போலீஸில் புகார் கொடுக்கவே போலீஸார் தீவிர வேட்டை நடத்தி அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்களது இன்னொரு கூட்டாளியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
நான்கு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நான்கு பேரும் அப்பீல் செய்தனர். அதில் மேற்கண்ட 3 பேரின் அப்பீலும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து வடக்கில் உள்ள பபூல் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டுத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
நான்காவது நபரின் அப்பீல் மனு மீது இன்னும் விசாரணை முடிவடையவில்லை. அவரது மனு நிராகரிக்கப்பட்டால் அவரும் இதுபோலவே பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்படுவார் என அரசு வக்கீல் தெரிவித்துள்ளார்.
இவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும்பாலான தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில்தான் நிறைவேற்றப்படும். கடந்த ஜூலை மாதம் முதல் மரண தண்டைன நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 60 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இதில் செப்டம்பர் 5ம் தேதி மட்டும் 21 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இதுவரை 210 பேருக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications