வெள்ள அபாயம்: அணைகளில் தண்ணீர் திறப்பு
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருப்பதால், இரு அணைகளிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து. அணைகளின் நீர் பிடிபபு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகள் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த அணைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் தண்ணீர் பாயும் திருவட்டார், குழித்துறை ஆற்றின் கரையோர பகுதிகள், பரளியாறு கரையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று வருவாய் துறையினரால் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.
பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பேச்சிபாறை அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சிபாறை அணையில் இருந்து வினாடிக்கு 276 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீர் திறத்துவிடப்பட்டுள்ளது. பேச்சிபாறை அணைக்கு 668 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 720 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications