நாடார்களை கேலியாகப் பேசுவதா? திமுக நிர்வாகிக்கு நாடார் பேரவை எச்சரிக்கை!
கரூர்:
நாடார் சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசிய திமுக நெசவாளர் பிரிவு செயலாளர் பரமத்தி சண்முகம் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக நாடார் பேரவை எச்சரித்துள்ளது.
பாஜகவைக் கண்டித்து சமீபத்தில் கரூரில் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் பரமத்தி சண்முகம் சரத்குமாரை கண்டித்து பேசியபோது வைகோ, விஜயகாந்த் தான் விவரம் புரியாமல் பேசுகின்றனர் என்றால் இந்த சரத்குமாருக்கு என்ன வந்தது.
முன்பு நாடார்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் விட மறுத்த போது அவர்களுக்கு விடுதலை வாங்கித் தர பெரியார், அண்ணா, கலைஞர் எல்லாம் எப்படி கஷ்டப்பட்டார்கள் என சரத்குமார் அவர் அம்மா, அப்பாவைக் கேட்டால் தெரியும் என்று பேசினார்.
இப் பேச்சு நாடார்கள் மனதை புண்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாடார் பேரவை பரமத்தி சண்முகத்திற்கு எதிராக கண்டன போஸ்டர்களை கரூர் மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளனர். உடனே அவர் மன்னிப்பு கேக்காவிட்டால் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications