லாரி மீது பஸ் மோதல் - கண்டக்டர் சாவு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் சரக்கு லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்து நடத்துநர் பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருமங்கலம் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து இன்று அதிகாலை நடந்தது.
விபத்தில் சிக்கிய லாரி பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வழியில் பஞ்சர் ஆகி நின்று விட்டது. இந்த நிலையில் வேகமாக வந்த அரசுப் பேருந்து அந்த லாரி மீது மோதியது.
இதில் பேருந்தின் நடத்துநர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பெண்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications