நடுக்கடலில் மீனவர்கள் மோதல் குமரி மீனவர்கள் நெல்லையில் சிறைவைப்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி நடுக்கடலில் குமரி, நெல்லை மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி செபஸ்டியன். அதே பகுதியை சேர்ந்தவர் ஜேசுவன் குருசு. இவர்களுக்கு சொந்தமான 2 விசைபடகுகள் மூலம் சுமார் 20 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு கட்டுமரங்களில் வந்த நெல்லை மாவட்டம் கூத்தாம்குளம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், விசை படகு மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் விசைபடகில் வந்த குமரி மீனவர்களை விசை படகுடன் நெல்லை மீனவர்கள் கடத்தி சென்று தங்களுடைய ஊரில் சிறை வைத்தனர். இதையடுத்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைபடகு மீனவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் அவர்களுடைய குடும்பத்தினர் கவலையடைந்து கன்னியாகுமரி போலீசில் தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் விசாரணை செய்த போலீசார் ராதாபுரம் மற்றும் கூடன்குளம் போலீசுடன் கூத்தாங்குளம் பகுதிக்கு விரைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சிறை வைக்கப்பட்ட வீசை படகு மீனவர்களை மீட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications