பலாத்காரம் செய்வதற்காக மாணவியை அடைத்து வைத்த ஆசிரியர் கைது
புதுக்கோட்டை:
பலாத்காரம் செய்வதற்காக பத்தாம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் அடைத்து வைத்திருந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் மறவாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் உஷா ராணி. 15 வயதாகும் இவர் சடையம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில், பத்தாவது வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 26ம் தேதி அவர் ஸ்பெஷல் கிளாஸுக்குப் போயிருந்தார். ஆனால் வகுப்பு முடிந்து அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குழப்பமடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்குச் சென்றனர். அங்கு உஷாவின் வகுப்பாசிரியர் முத்து இருப்பதைப் பார்த்தனர்.
அவரிடம் உஷா குறித்துக் கேட்டபோது, அவர் மங்கனூர் கிராமத்துக்கு தனது தோழியுடன் போனதைப் பார்த்ததாக முத்து தெரிவித்தார்.
ஆனால் அவர் பேச்சில் பெற்றோர் திருப்தி அடையவில்லை. இதையடுத்து ஒவ்வொரு வகுப்பாக சென்று கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது ஆசிரியர்கள் தங்கும் அறையில் உஷா அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர்.
வீட்டுக்குக் கூட்டிச் சென்று அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தபோது, பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தன்னை ஆசிரியர் முத்து அடைத்து வைத்திருந்ததாக உஷா கூறியுள்ளார்.
இதையடுத்து உஷாவின் பெற்றோரும், மற்ற பொதுமக்களும் சேர்ந்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் போலீஸார், கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
ஆசிரியர் முத்து மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் இருந்து வந்தனவாம். கல்யாணமாகி, குழந்தைகளையும் பெற்ற முத்து, மாணவிகளிடம் இதுபோல தவறாக நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதுவரை போராட்டத்தை விட மாட்டோம் என அனைவரும் பிடிவாதமாக கூறியதால் ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரை சஸ்பெண்ட் செய்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்லம் உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications