சேது: தமிழக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - நெடுமாறன்
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதில், மதவாதிகளின் நெருக்கடிக்குப் பணிந்து மத்திய அரசு தாமதம் செய்தால், உடனடியாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல், நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மேற்கொண்ட பட்டினிப் போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்டு இருக்கும் கருத்து தேவையற்றது மட்டுமல்லாது, ஜனநாயக வழிமுறைகளில் குறுக்கிட்டதும் ஆகும்.
காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினை போன்ற மிக முக்கியமான பிரச்சினைகளில், உச்சநீதிமன்றத்தின் ஆணைகளை மதிப்பதற்கு முற்றிலும் தவறிய கர்நாடக, கேரள அரசுகள் மீது சிறு கண்டனமும் இதுவரை தெரிவிக்காத உச்சநீதிமன்றம், இந்தப் பிரச்சினையில் மட்டும் தலையிட்டுக் கண்டிப்பதற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராக உள்ளது.
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை முடக்குவதற்கு யார் முயற்சி செய்தாலும், அதை தமிழர்கள் ஒன்று திரண்டு நின்று முறியடிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில், மத்திய அரசு ஊசலாட்டத்துடன் தடுமாறுமானால், அந்த அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் அனைவரும் தங்களது பதவிகளைத் துறந்து வெளியேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications