ராஜ்நாத் சிங்குடன் இன்று கெளடா பேச்சு இழுபறிக்கு முடிவு வருமா?
டெல்லி:
கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் தொடர்பாக டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவெ கெளடா இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பாஜக செய்தித் தொடர்பாளர் யஷ்வந்த் சின்ஹா பேசுகையில், இரு கட்சிகளுக்கும் இடையே 20 மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை இல்லை என்று முதல்வர் குமாரசாமி கூற முடியாது.
அந்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அது அமல்படுத்தப்பட வேண்டும். மதிக்கப்பட வேண்டும். ஆட்சிப் பகிர்வு தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது. எடியூரப்பாதான் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவெ கெளடா, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேசுகிறார். இதில் சுமூக நிலை ஏற்படும் என நம்புகிறோம்.
தேவெ கெளடா இன்று ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசிய பின்னர் நாளை மீண்டும் பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் கூடி விவாதிக்கவுள்ளது.
கெளட, ராஜ்நாத் சிங் சந்திப்பின்போது துணை முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொள்கிறார்.
அமைச்சரவைக் கூட்டம்:
இதற்கிடையே, கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தை முதல்வர் குமாரசாமி திடீரென இன்று கூட்டியுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மட்டும் பங்கேற்பர். துணை முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் பதவி விலகி விட்டதால் அவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இருப்பினும், அவர்களுக்கும் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாஜகவினர் கண்டிப்பாக கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில் என்ன விவாதிக்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் விசேஷமாக எதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications