பாஜகவினர் நடமாட முடியாது - ஜி.கே.மணி
சேலம்:
சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைத்தால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் எவரும் நடமாட முடியாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்ற பயம் மதவெறி கும்பலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் வந்தால், தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பாஜக கூட்டணிக்கு கிடைக்காது.
குஜராத் உள்ளிட்ட 3 வட மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வருவதால், ராமர் பால பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். தேர்தலை உள் நோக்கமாகக் கொண்டு சேது சமுத்திர திட்டத்தை முடக்க நினைக்க கூடாது.
அப்படி முடக்க நினைத்தால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் எவரும் நடமாட முடியாது என்று எச்சரிக்கின்றேன் என்றார் மணி.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications