நாகர்கோவிலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil


நாகர்கோவில்:

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உள்நாட்டு மீனவர்களுக்கு வலை, எந்திர இரு சக்கர வாகனம், ஐஸ் பாக்ஸ் போன்றவைகளை மானியத்துடன் வழங்க வேண்டும். மீன்துறை அலுலகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மீனவர் நல வாரியத்தை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவிலில் மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் செபஸ்டியன் தலைமை வகித்தார். பொது செயலாளர் அந்தோணி, சி.ஐ.டி.யூ துணைதலைவர் பொன்.வசந்தன் மற்றும் அலெக்சாண்டர், மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+