பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் கயத்தாறு அருகே இரண்டு, பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு இலந்தைகுளம் கிராமத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளிய போது இரண்டு முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள் கிடைத்தன.
இவற்றை திருநெல்வேலி தொல்லியல் துறை அதிகாரி செந்தில் செல்வகுமரன் பார்வையிட்டு அவற்றை கைப்பற்றினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இவை சுமார் 1500 முதல் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம். இவை செம்மண்ணை பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். கலை நயம் மிக்கதாவும் இவை உள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications