ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிப்பு
கடப்பா:
ஆந்திரமாநிலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும் 4 வழிப்பாதைக்காக அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு இடிக்கப்பட்டது.
ஆந்திரமாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள மானபுலிவெந்தலாவில் அம்மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் வீடு உள்ளது. இங்கு அவருடைய தாயார் வசித்து வருகிறார்.
நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 4 வழிச்சாலைகள் ஆந்திராவில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த 4 வழிச்சாலை ராஜசேகர ரெட்டியின் வீட்டிற்கு அருகில் அமையவிருக்கின்றது.
சாலையை விரிவு படுத்த வேண்டியிருப்பதால் வீட்டை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனராம். இதற்கு கடப்பா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் முதல்வரிடம், இந்த சாலையை வேறு வழியாக மாற்றி விடலாமா என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு முதல்வர், மக்களின் பயன்பாட்டிற்காக எனது வீட்டை இடித்தால் தவறு கிடையாது. எனது வீட்டை இடிப்பதற்காக இப்பகுதியில் அமையவிருக்கும் சாலை திட்டத்தை வேறு வழியாக மாற்ற தேவையில்லை. நீங்கள் தாராளமாக வீட்டை இடித்துக் கொள்ளலாம் என்று கூறி அனுமதியளித்தார்.
இதைக் கேட்ட அதிகாரிகள் முதல்வருக்கு பெரும் நன்றி தெரிவித்தார்கள். தற்போது முதல்வரின் தனது சொந்த செலவிலேயே வீடு இடிக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்காக தனது வீட்டை இடிக்க அனுமதி கொடுத்த ஆந்திர முதல்வரை அம்மாநில மக்கள் பாராட்டி தள்ளுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications