புலிகளுடன் ஐஸ்லாந்து தூதர் சந்திப்பு; இலங்கை அரசு எச்சரிக்கை!
கொழும்பு:
ஐஸ்லாந்து நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனை சந்தித்துப் பேசியதால் இலங்கை அரசு கடுப்பாகியுள்ளது. ஐஸ்லாந்து அரசுக்கு இதுதொடர்பாக இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐஸ்லாந்து நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி ஜார்னி வெஸ்ட்மேன் சமீபத்தில் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வனை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து இலங்கை அரசு அதிருப்தியும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில்,
இது சரியான செயல் அல்ல. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு அதிகாரி இதுபோல நடந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றிருப்பவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூற நேரிடும்.
இருப்பினும் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் தொடர்பாக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நாங்கள் மதிப்பதால்தான் இவற்றைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நிலைமை இப்படியே நீடித்தால் அந்த முடிவை நாங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டி வரும். கிளிநொச்சியில் நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்துத் தெரியவில்லை.
தூதரக பாஸ்போர்ட்டுடன் வந்த ஒருவர் (ஐஸ்லாந்து அதிகாரி), போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர் என்ற போர்வையில் தனிப்பட்ட முறையில் கிளிநொச்சிக்குச் சென்று தவறானது.
இது போன்ற விதிமீறல்களை இலங்கை அரசு சாதாரணமாக எடுத்துக் ெகாள்ளாது. தேவைப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இந் நிலையில் தங்களது நாட்டு அதிகாரி கிளிநொச்சிக்குச் சென்று குறித்து ஐஸ்லாந்து அரசு இலங்கை அரசிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications