சென்னையில் ரவுடிகள் வேட்டை ஒரே நாளில் 1000 பேர் வளைப்பு
சென்னை:
சென்னை நகரில் போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் 63 பிரபல ரவுடிகள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர்.
சென்னை நகரில் சமீபத்தில் சில என்கவுண்டர்கள் நடந்தது. முக்கியமான பங்க் குமார், வெள்ளை ரவி ஆகிய பிரபல தாதாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் சின்னச் சின்ன ரவுடிகளையும், பழைய குற்றவாளிகளையும் வளைத்துப் பிடித்துப் போடும் நடவடிக்கையை சென்னை காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி தற்போது நள்ளிரவு நேரங்களில் நகர் முழுவதும் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி ஆங்காங்கு ரெய்டுகளை நடத்தி ரவுடிகளை வளைத்துப் பிடித்து வருகின்றனர்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிரடி வேட்டையில் சில பிரபல ரவுடிகள் உள்பட 1035 பேர் சிக்கினர். இந்த ரவுடி வேட்டையில் மொத்தம் 444 ரோந்துப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். நகர் முழுவதும் சல்லடை போட்டு ரவுடிகளையும், சந்தேகத்திற்கு இடமான வகையில் காணப்பட்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்களில் 63 பேர் ரவுடிகள் ஆவர். 111 பேர் பழைய குற்றவாளிகள். 39 பேர் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள். இதுதவிர மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டியதாக 93 பேர் பிடிபட்டனர்.
ஸ்டோர்மிங் ஆபரேஷன் என பெயரிடப்பட்டுள்ள இந்த நள்ளிரவு வேட்டை தொடரும் எனவும், ரவுடிகளின் கொட்டம் முழுமையாக அடக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதவிர ஹெல்மட் அணியாமல் சென்றதாக 1379 பேர் பிடிபட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications